செய்திகள்

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை..

தற்போது நிலவுகின்ற அதிக மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த நிலை  இருப்பதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.

கண்டி, கேகாலை மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கே இவ்வாறான மண்சரிவு அனர்த்த நிலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரதேசங்களில் மலை சாரலை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறும் ஆய்வு அறிவித்துள்ளது.

நாட்டில் பல பிரதேசங்களில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் பலத்த மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்குதல் அபாயத்திலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறும் வலிமண்டல திணைக்களம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம்

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com