உலகம்

மூவாயிரம் ஆண்டு பழமையான மம்மி எகிப்தி கண்டுபிடிப்பு.

சுமார் 3,000 ஆண்டுகள் பழமையான மம்மி வடிவிலான சவப்பெட்டிகள் எகிப்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

எகிப்தின் லக்சர் நகரில் மரத்தினாலான மம்மி வடிவ சவப்பெட்டிகள் கண்ணெடுக்கப்பட்டதை  எகிப்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவை திருடப்படலாம் என்ற காரணத்துக்காக மதகுரு ஒருவரால் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கண்டெடுக்கப்பட்ட சவப்பெட்டிகளில் பல்வேறு வண்ணங்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்ததாகவும்,
தொல்பொருள் ஆராய்ச்சியில் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட முக்கிய கண்டுபிடிப்பு இதுவெனவும் எகிப்தின் தொல்பொருள் ஆராய்ச்சித்துறை தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button