அரசியல்

மூஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வின்றேல் – அமைச்சுப்பொறுப்பு இல்லை- முஸ்லிம் காங்கிரஸ்.

நாட்டில் முஸ்லிம்கள் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும் வரையில் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்கப்போவதி்ல்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடக்கூட்டம் கட்சியின் அலுவலகமான கொழும்பிலுள்ள தாருஸ்ஸலாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

கல்முனை பிரதேச செயலக விவகாரம் மற்றும் தற்போது நாட்டில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிட்டும் வரையில் அமைச்சுப் பதவிகளை ஏற்கப் போவதில்லை கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தீர்மானித்தாக முஸ்லிம் காங்கிரஸ் தெரித்துள்ளது.

Related Articles

Back to top button
image download