உலகம்

மெக்சிக்கோவில் தஞ்சமடைகிறார் பொலிவியாவின் முன்னாள் ஜனாதிபதி

பொலிவியாவின் முன்னாள் ஜனாதிபதி ஈவோ மொறாலஸுக்கு தஞ்சம் வழங்க மெக்ஸிக்கோ முன்வந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ஈவோ மொறாலஸ் பதவி விலகி ஒருநாளிலேயே அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஈவோ மொறாலஸின் கோரிக்கையின் பின்னர் மனிதாபிமான காரணங்களுக்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக மெக்ஸிக்கோ தெரிவித்துள்ளது.

மெக்ஸிக்கோவின் இந்தத் தீர்மானம் தொடர்பில் ஈவோ மொறாலஸ் இதுவரை கருத்தெதனையும் தெரிவிக்கவில்லை.

தம்மைப் பதவியிலிருந்து விலக நிர்ப்பந்தித்த இருண்ட அதிகாரத்திற்கெதிராகப் போராடுமாறு அவர் தமது ஆதரவாளர்களிடம் முன்னர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download