செய்திகள்

மெக்ஸிகோ துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் பலி!

மெக்ஸிகோவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்தற்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

இதில் 10 போதைப்பொருள் கடத்தற்காரர்களும் 04 பொலிஸ் உத்தியோகத்தர்களும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவை அண்மித்த மெக்ஸிகோ எல்லை பகுதியில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

போதைப்பொருள் கடத்தற்காரர்களை பயங்கரவாத குழுக்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் கருத்து வௌியிடப்பட்டதையடுத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Related Articles

Back to top button