செய்திகள்
மெத்தேகம பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து : இருவர் பலி
ஹங்வெல்ல – ஊராபொல வீதியின் மெத்தேகம பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தொன்றில் சிறுமி ஒருவரும் பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கர வண்டி ஒன்று பாதையை விட்டு விலகி அருகில் இருந்த கால்வாய் ஒன்றினுல் விழுந்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண்ணொருவரையும் சிறுமியையும் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் 7 வயதுடைய சிறுமி ஒருவரும் 37 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் முச்சக்கர வண்டி ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கிரிந்திவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.