செய்திகள்

மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் 4 மணி நேரம் வாக்குமூலம் பதிவு

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையான பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று பிற்பகல் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை முன்னிலையாகியிருந்தார்.

பிற்பகல் இரண்டு மணியளவில் ஆணைக்குழுவிற்கு சென்ற ஆண்டகை வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறினார்.

அவரிடம் சுமார் 4.00 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button
image download