செய்திகள்

மெஸ்சினா கப்பலில் பரவிய தீ கட்டுக்குள் வந்தது.!

எம்எஸ்சி மெஸ்சினா கப்பலில் பரவிய தீ கப்பல் ஊழியர்களால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்திலிருந்து சிங்கபூர் நோக்கி பயணித்த ‘எம்எஸ்சி மெஸ்சினா’ என்ற சரக்கு கப்பல், கிரிந்தை – மஹா இராவணன் கலங்கரைவிளக்கத்தில் இருந்து கிழக்கு திசையில் 480 கடல்மைல்களுக்கு அப்பால் கப்பலின் இயந்திர அறையில் தீ பரவியது. மெஸ்சினா கப்பல் லைபீரியா நாட்டு கொடியுடன் பயணிக்கும் சரக்கு கப்பலாகும். அதில் 28 ஊழியர்கள் இருந்தனர். அதில் ஒருவர் காணமல் போயுள்ளதாக இந்திய கரையோர படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்தவருடம் இடம்பெற்ற நிவ் டயமண்ட் கப்பலின் தீ விபத்து மற்றும் கடந்த மே மாதம் இடம்பெற்ற எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தீ விபத்து காரணமாக கடலுக்கு பாரியளவில் சுற்றாடல் ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டன.

இவ்வாறான பின்னணியில் மெஸ்சினா கப்பல் நேற்றைய தினம், இலங்கைக்கு சொந்தமான கடல் பொருளாதார வலயத்திற்கு அப்பால் கப்பல் தீப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button