...
விளையாட்டு

மேற்கிந்திய தீவுகளுக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது

சுற்றுலா மேற்கிந்திய தீவுகளுக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று (02) இடம்பெறவுள்ளது.

போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 46 ஓட்டங்களை பெற்றிருந்தது.

முன்னதாக போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 253 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் ரமேஸ் மெண்டிஸ் 70 ஓட்டங்கள் வழங்கி 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 204 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen