விளையாட்டு

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில் பாகிஸ்தான் அணி மகத்தான வெற்றி!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், பாகிஸ்தான் அணி 63 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

கராச்சி மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொஹமட் ரிஸ்வான் 78 ஓட்டங்களையும் ஹெய்டர் அலி 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ரொமாறியோ செப்பர்ட் 2 விக்கெட்டுகளையும் அகீல் ஹொசைன், ஒசேன் தோமஸ், டோமினிக் ட்ரேக்ஸ் மற்றும் ஒடீயன் ஸ்மித் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

Related Articles

Back to top button