...
விளையாட்டு

மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 230 ஓட்டங்களை பெற்றது!

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 230 ஓட்டங்களைப் பெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி பெற்ற 386 ஓட்டங்களுக்கு பதிலளித்தாடிய நிலையில் அவ்வணி குறித்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றது.

நேற்றைய ஆட்ட நேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட் இழப்புக்கு 224 ஓட்டங்களை எடுத்திருந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணியில் கைல் மேயர்ஸ் அதிகபடியாக அணிசார்பில் 45 ஓட்டங்களை பெற்றார்

கிரேக் பிராத்வைட் (42 ஓட்டங்கள்), ஜேசன் ஹோல்டர் (36 ஓட்டங்கள்), ஹக்கீம் கார்ன்வெல் (39 ஓட்டங்கள்) ஆகியோர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்வரிசை வீரர்கள் சிறந்த ஓட்டங்களை பெற தவறியிருந்த நிலையில் கைல் மேயர்ஸ், ஜேசன் ஹோல்டர் மற்றும் ஹக்கீம் கோர்ன்வெல் ஆகியோர் இணைந்து 111 ஓட்டங்களை குவித்து அணியை பலப்படுத்தினர்.

சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எப்போதும் வசதியாக இருக்கும் காலி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பந்து வீச்சில் பிரவீன் ஜயவிக்ரம 4 விக்கெட்டுக்களையும் ரமேஷ் மெண்டிஸ் 3 விக்கெட்டுக்களையும், லசித் எம்புல்தெனிய மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இந்நிலையில், 4 ஆம் நாளான இன்றைய தினம் இலங்கை அணி தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளது. இந்த ஆட்டம் ஆரம்பிக்க முன்னதாக மேற்கிந்திய தீவுகளை விட இலங்கை அணி 156 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen