செய்திகள்

மேலும் அதிகரித்துள்ள சீமெந்து விலை!

இறக்குமதி செய்யப்படும் சீமெந்தின் விலை இன்று (ஏப்ரல் 25) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோகிராம் மூடை ஒன்றின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என சீமெந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி, 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூடை ஒன்றின் புதிய விலை ரூ.2,850 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

இந்த வருடத்தில் இதுவரை நான்காவது முறையாக சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்ளுர் சீமெந்தின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க உள்ளூர் சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்திருந்தன.

அதேபோல்,கடந்த மார்ச் மாதம் 13ஆம் திகதி 50 கிலோ கிராம் சீமெந்து மூடையின் விலை 350 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், ஏப்ரல் 01ஆம் திகதி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் சீமெந்தின் விலை 50 கிலோகிராம் மூடைக்கு 500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button