செய்திகள்

மேலும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோருக்குக் கொரோனா

(ராகவ்)

மேலும் இரண்டாயிரத்து 189 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை
ஒரு இலட்சத்து 82ஆயிரத்து 779ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த ஆயிரத்து 434 பேர் இன்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய இலட்சத்து 49 ஆயிரத்து 825 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

அத்துடன், கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 405ஆகப் பதிவாகியுள்ளது.

Related Articles

Back to top button