செய்திகள்

மேலும் ஒரு தொகை ஃபைசர் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் ஃபைசர் தடுப்பூசிகளின் 26 ஆயிரம் டோஸ்கள் இன்று (12) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து கட்டாருக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட இந்த தடுப்பூசிகள் பின்னர் அங்கிருந்து காலை 2.35 மணியளவில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இதனையடுத்து, இதுவரை 52 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

குறித்த தடுப்பூசிகள் விமான நிலைய களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றை அரச மருந்தக கூட்டுத்தாபனத்திடன் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button