செய்திகள்

மேலும் ஒரு தொகை சீன தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

சீனாவில் உற்பத்தி செய்யப்படும் மேலும் 10 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளன.

இன்று (09) காலை 5.02 மணியளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 869 விமானத்தின் மூலம் குறித்த தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, நாட்டிற்கு இதுவரை 3.1 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

கடந்த 6ஆம் திகதி சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சைனோபார்ம் தடுப்பூசியின் ஒரு மில்லியன் டோஸ்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ​நாட்டில் இதுவரை 1,033,028 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com