செய்திகள்

மேலும் 1,864 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,864 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 59 ஆயிரத்து 89 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன்,கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2 ஆயிரத்து 481 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

அதன்படி, நாட்டில் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 25 ஆயிரத்து 952 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, கொரோனாத் தொற்று காரணமாக வைத்தியசாலைகள் மற்றும் தனிமைப்படுத்தல் மையங்கள் என்பவற்றில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 60 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Back to top button