செய்திகள்

மேலும் 76,000 பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

இலங்கைக்கு மேலும் 76,000 பைஸர் தடுப்பூசிகள் இன்று அதிகாலை கிடைக்கப்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நெதர்லாந்தில் இருந்து குறித்த தடுப்பூசி தொகை கட்டார் ஊடாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

அத்துடன் இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள 120,000 ஸ்புட்னிக் – வி தடுப்பூசியும் 40 இலட்சம் சைனோபாம் தடுப்பூசியும் இந்த வாரம் நாட்டுக்கு கிடைக்கப்பெறவுள்ளன.

Related Articles

Back to top button
image download