செய்திகள்

மேலும் 914 பேர் கைது.

(ராகவ்)

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 914 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 14 மாதங்களில் நேற்றைய தினமே அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

நேற்று 101 பேர் மாத்தளை மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் நாடளாவிய ரீதியில் இதற்கான விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தக் காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 17,300 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

தற்போது பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், அனைவரையும் வீடுகளிலேயே இருக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதனை தவிர, பயணக் கட்டுப்பாட்டை மீறி பயணித்த 20 முச்சக்கரவண்டிகள் மேல் மாகாணத்தில் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

Related Articles

Back to top button