செய்திகள்
மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவு திறப்பு : மக்களுக்கு வேண்டுகோள்
தலவாக்கலை – மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவொன்று திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்த வான் கதவு இன்று அதிகாலையில் திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டயகம, நானுஓய, நோனாவத்தை, லிந்துலை ஆகிய பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பெய்த அடை மழை காரணமாக மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், வான்கதவொன்று திறந்து விடப்பட்டுள்ளதாகவும், நீர்த்தேக்கத்தினை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.