மலையகம்
மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு

மலையகத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் நீர்தேக்கத்தின் அனைத்து வான்கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன.
இதனால் ஒரு செக்கனுக்கு 200 கனஅடி கொள்ளளவு நீர் வௌியேற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டதன் காரணமாக கொத்மலை ஓயாவின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.
இதனால் கொத்மலை ஓயாவின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.