செய்திகள்

மேல் மாகாணத்திலிருந்து சென்றவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட உடனடி என்டிஜன் பரிசோதனைகளில் 13 பேருக்கு கோவிட் தொற்று ..

மேல் மாகாணத்திலிருந்து வெளியிடங்களுக்கு செல்வதற்கான 11 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட உடனடி என்டிஜன் பரிசோதனைகளில் மேலும் 13 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் இதுவரை 10,986 பரிசோதனைகளில் 74 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் குறித்த தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த 377 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும் நேற்று முன்தினம் 1,359 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது மேலும் 07 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் தொடர்பு பட்ட 315 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த உடனடி ஆன்டிஜன் பரிசோதனைகள் எதிர்வரும் ஜனவரி 05ஆம் திகதி வரைக்கும் மேற்கொள்ளப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தகக்து.

தமிழ்தெரண

Related Articles

Back to top button