அரசியல்செய்திகள்

மேல் மாகாணத்தில் கட்அவுட் அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்.

மேல் மாகாணத்திலுள்ள வீதிகளின் இரு மருங்கிலும் காணப்படும் மின்கம்பங்கள் மற்றும் தொலைபேசி தூண்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், மற்றும் கட்அவுட்டுக்களை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கான ஆலோசனை மேல் மாாணத்தின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் நேற்று மாலை வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பணிப்புரையில் கீழ், இந்த நடவடிக்கைகளை பொலிஸ் தலைமையகம் முன்னெடுத்துள்ளது.

தொழிலாளர்களை ஈடுபடுத்தி, அனைத்து கட்அவுட்டுகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related Articles

Back to top button