...
செய்திகள்

மேல் மாகாணத்தில் விசேட பொலிஸ் நடவடிக்கை

மேல் மாகாணத்தில், சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத, 327 பயணிகள் போக்குவரத்து பஸ்களின் சாரதிகள் மற்றும் 68 குளிரூட்டப்பட்ட சொகுசு ரக பஸ்களின் சாரதிகளுக்கும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், மேல் மாகாணத்தில் 510 கடைகளின் உரிமையாளர்களுக்கும் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேல்மாகாண மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுகிறார்களா என்பதை கண்டறியும் விசேட பொலிஸ் நடவடிக்கை நேற்று பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது 875 பயணிகள் பேருந்துகள் / 190 குளிரூட்டப்பட்ட பேருந்துகள் மற்றும் 1164 கடைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

Related Articles

Back to top button


Thubinail image
Screen