ஆன்மீகம்

மேல் மாகாணம்- பாணதுறை நகர் அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்

ஆக்கம்- த.மனோகரன். துணைத் தலைவர், அகில இலங்கை இந்து மாமன்றம்.

மேற்கிலங்கை வேல் தாங்கி நின்றருளும் வேலவனே
ஆதரித்து எங்களை நீ காத்தருள வரவேண்டும்
அச்சமின்றி நாம் வாழ வழியை நீ தரவேண்டும்
பாணதுறை நகர் கோயில் கொண்ட கந்தசுவாமி தாள் சரணம்

அதர்மத்தை அழித்தொழிக்க அவதரிக்கும் வேலவனே
பகை கொண்டோர் கொட்டமதை அடக்கிடவே வரவேண்டும்
மனித குலம் பகையின்றி வாழும் வழி தரவேண்டும்
பாணதுறை நகர் கோயில் கொண்ட கந்தசுவாமி தாள் சரணம்

வேல் தாங்கி நின்றிருந்து வேதனைகள் களையும் வேலவனே
வீரமிகு மனவுறுதி தந்திடவே வரவேண்டும்
வெற்றியை நாமடைந்து வாழ வழி தரவேண்டும்
பாணதுறை நகர் கோயில் கொண்ட கந்தசுவாமி தாள் சரணம்

சூரபத்மன் ஆணவத்தை அடக்கிய வேலவனே
சூழவரும் தீமைகளை அழித்திடவே வரவேண்டும்
சூழலும் சுற்றமும் மேன்மையுற வழி தரவேண்டும்
பாணதுறை நகர் கோயில் கொண்ட கந்தசுவாமி தாள் சரணம்

வள்ளி தெய்வானையரை உடன் கொண்ட வேலவனே
வற்றாத நல்லருளைத் தந்திடவே வர வேண்டும்
தீயபகை கொடுமையின்றி வாழ வழி
தரவேண்டும்
பாணதுறை நகர் கோயில் கொண்ட கந்தசுவாமி தாள் சரணம்

ஓம் என்ற ஒலியினிலே உறைகின்ற வேலவனே
ஒரு துன்பம் எமக்கில்லை என்ற நிலை தந்திடவே வரவேண்டும்
மகிழ்ச்சி நிறை எதிர்காலம் அடைய வழி தரவேண்டும்
பாணதுறை நகர் கோயில் கொண்ட கந்தசுவாமி தாள் சரணம்.

Related Articles

Back to top button