செய்திகள்விளையாட்டு

மே மாதத்திற்கான சிறந்த இலங்கை கிரிக்கெட் வீரர் யார்.?

ஐ.சி.சி மாதத்தின் சிறந்த விரர், வீராங்கனைகளை தெரிவு செய்வதற்கான புதிய விருதை அறிமுகம் செய்துள்ளது. அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக செயற்படும் வீர, வீராங்கனைகளை அங்கீகரிக்கும் வகையிலும் குறித்த விருது வழங்கப்படுவதாக ஐ.சி.சி அறிவித்துள்ளது.

அதற்கமைய, ஐ.சி.சியின் மே மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரரை தெரிவுசெய்வதற்கான பரிந்துரை பட்டியல் வெளியாகியுள்ளது.

ஆடவர் பிரிவின் பாகிஸ்தானின் ஹசன் அலி, இலங்கை அணியின் பிரவீன் ஜெயவிக்ரம மற்றும் பங்களாதேஷ் அணியின் முஷ்பிக்யூர் ரஹிம் ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

மகளீர் பிரிவில் ஸ்கொட்லாந்து அணியின் சகல துறை வீராங்கனை கத்ரின் பிரயிஸ், அயர்லாந்து அணியின் கெபி லூயிஸ் மற்றும் அயர்லாந்து அணியின் லியா போல் ஆகியோரின் பெயரின் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் சிறந்த வீரர்களாக இந்திய அணி வீரர்கள் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com