சினிமா

மே 9ஆம் திகதி காலா படத்தின் பாடல்கள்

காலா படத்தின் பாடல்கள் மே 9ஆம் திகதி வெளியிடப்படும் என அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் வருகிற ஜூன் 7ஆம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டி.வி கைப்பற்றியிருக்கிறது.

பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படம் மும்பையை பின்னணியாக கொண்டு உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் நானா படேகர் அரசியல்வாதியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

சமுத்திரக்கனி, சம்பத், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், {ஹமா குரேஷி, அஞ்சலி பட்டேல், அருந்ததி, சாக்ஷி அகர்வால், சுகன்யா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலம்ஸ் மூலம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com