...
செய்திகள்பதுளை

மொனகராகலை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் வெள்ள அபாய நிலை நிவுகிறது.

மொனகராகலை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் வெள்ள அபாய நிலை நிவுகிறது.

நக்கல, கும்புக்கணை, ஒக்கம்பிட்டிய ஆகிய பிரதேசங்களின் தாழ்நிலப் பகுதிகளில் இன்றிரவு வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

தற்சமயம் நிலவும் அடை மழையினால் ‘உடவளவை’ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால், நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வழிந்தோடும் நிலை காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, நாளை காலை ஒரு செக்கனுக்கு 6 ஆயிரம் கன அடி நீர் ‘வளவை’ கங்கைக்கு வெளியேற்றப்படவுள்ளது. இதனால் ஆறுகளின் இரு பக்கங்களிலும் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.. இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகளும், தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

Related Articles

Back to top button


Thubinail image
Screen