செய்திகள்

மொஹமட் சஹ்ரான் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்..

கடந்த 24 மணித்தியாலங்களில் காவல்துறை மற்றும் பாதுகாப்பு முப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின் போது 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார். குறிப்பாக மதங்களுக்கிடையே முறுகலை ஏற்படுத்தும் வகையிலான ஒளிபதிவுகள் அடங்கிய 849 வீடியோ தட்டுகளை தம்வசம் வைத்திருந்த குற்றசாட்டில், இரண்டு சந்தேகநபர்கள் காலி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு பகுதியில் இராணுவ சீருடையை ஒத்த ஆடைகளை வைத்திருந்த குற்றசாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, நல்லதண்ணி பகுதியில், நான்கு வோக்கி டோக்கி கருவிகளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.மேலும்,  மெதிரிகிரிய பகுதியில், இராணுவ சீருடையை ஒத்த ஆடைகளை வைத்திருந்த குற்றசாட்டில் இரண்டு சந்தேகநபர்களும், தவுலகல பிரதேசத்தில் உள்ளுரில் தயாரிக்கப்பட்ட 6 பெற்ரோல் குண்டுகளுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, வெல்லம்பிட்டியவில் கண்டுபிடிக்கப்பட்ட சர்ச்சைக்குறிய செப்பு தொழிற்சாலையில் பணிப்புரிந்ததாக சந்தேகத்தின் பேரில், ரங்கல பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்தோடு, தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என தேடப்பட்டு, காவல்துறையினரால் வெளியிடப்பட்டிருந்த சந்தேகநபர்கள் தொடர்பான ஒளிப்படங்களில் உள்ளவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்கள் தொடர்பாக தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டன. இதன்படி, நாவலப்பிட்டி பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உற்படுத்தப்பட்டபோது, அவரிடம் இருந்து கிடைத்த தகவல்களுக்கு அமைய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இரண்டு சந்தேகநபர்களிடமும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து, தாக்குதல்களுடன் தொடர்புடையதாக தேடப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் கம்பளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்க இரண்டு பேரும்,  சகோதர்கள் எனவும், இவர்கள் குறித்த பகுதியில் உள்ள ஒரு ஆடை விற்பனைக் கடையில் மறைந்திருந்த நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டுவந்த பிரதான சந்தேகநபர்கள் என கூறப்படும், மொஹமட் யூஹையில் சாதிக் அப்துல் ஹஃக் மற்றும்   மொஹமட் யூஹைம் ஷாஹிட் அப்துல் ஹஃக் என்ற இரண்டு சகோதர்கயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர உறுதிப்படுத்தினார். குறித்த இரண்டு சந்தேகநபர்கள் மறைந்திருந்த ஆடை விற்பனைக் கடை மற்றும் மாவனெல்லையில் உள்ள அவர்களது வீடு என்பன தற்போது விசேட அதிரடி படையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், குறித்த சந்தேகநபர்கள் பயன்படுத்திய வேன் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதனை வைத்திருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டு குற்றபுலனாவு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.  இதேவேளை, கல்முனை சாய்ந்தமருது பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற வெடிப்பு மற்றும் துப்பாக்கி சூட்டு சம்பவங்களின் போது காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டுள்ள பெண் மற்றும் சிறுமி தொடர்பில் காவல்துறை தகவல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, குறித்த இரண்டு பேரும் தற்கொலை குண்டுதாரியான மொஹமட் சஹ்ரானின் மனைவி மற்றும் குழந்தையென அடையாளம் காணப்பட்டுள்ளது.மொஹமட் சஹ்ரானின் சகோதரி குறித்த இரண்டு பேரையும் அடையாளம் காட்டியுள்ளதாகவும் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இதேவேளை, நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் விசேட சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமெனவும், காவல்துறை மற்றும் பாதுகாப்பு முப்படையினர் இந்த சோதனைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும்  காவல்துறை ஊடகப்பேச்சாளர் காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.  – Capital

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com