கல்விசெய்திகள்நுவரெலியாமலையகம்

மோட்சம் அமைப்பினரால் மலையக மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

கொழும்பு 15, மட்டக்குளியில் செயற்படும் மோட்சம் அமைப்பினரால் மலையக மாணவர்களுக்கு இலவசமாக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கட்டபுலா இல. 2 தமிழ் வித்தியாலய மாணவர்கள், லிந்துலை சிவானி தமிழ் வித்தியாலய மாணவர்கள்,
டெல்.தமிழ் வித்தியாலய மாணவர்கள் ஆகியோருக்கு நேற்றையதினம் இலவசமாக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கட்டபுலா இல.2 தமிழ் வித்தியாலய மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்வினை தொடர்ந்து கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

பாடசாலையின் அதிபரின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 100 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மோட்சம் அமைப்பின் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றதோடு மாணவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதேவேளை, லிந்துலை சிவானி தமிழ் வித்தியாலயம் ,
டெல் தமிழ் வித்தியாலயம் பாடசாலைகளுக்கும்
100க்கு மேற்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன .

கொழும்பு மற்றும் வெளிநாடுகளில் இருக்கக்கூடிய உறவுகளால் இதற்கான நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டன.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com