செய்திகள்

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவல் நிலையை கருத்திற்கொண்டு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள வேரஹேர அலுவலகத்தின் சாரதி அனுமதிப்பத்திர சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

சுகாதார பிரிவு வழங்கியுள்ள அறிவுறுத்தலுக்கமையவே சேவை வரையறுக்கப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம், சாரதி அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கென நாளை முதல் மே மாதம் 13ம் திகதி வரை நண்பகல் 12 மணியின் பின்னர் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கென வழங்கப்பட்ட காலம் மற்றும் நேரம் என்பன மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

எனினும் குறித்த காலப்பகுதியில் நண்பகல் 12 மணிக்கு முன்னர் நேரம் வழங்கப்பட்டிருந்த சேவையாளர்கள் குறித்த தினங்களில் முற்பகல் 8.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சேவைகளை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான மேலதிக தகவல்களை 011 2677877 எனும் தொலைப்பேசி இலக்கத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com