செய்திகள்

மோதிரத்திற்காக தந்தையை கொலை செய்த மகன்

ஆடிகம – பெரியமடுவ பிரதேசத்தில் தனது தந்தையை தாக்கி கொலை செய்த சந்தேகநபர் ஒருவரை பல்லம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்றிரவு 7.30 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது திருமண மோதிரத்தை அடகு வைத்து மது அருந்திய காரணத்தால் மேற்படி சந்தேகநபரான மகனால் அவரது தந்தை இவ்வாறு தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் திருமணம் செய்துக் கொண்டுள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மோதிரம் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பல்லம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button
image download