செய்திகள்
யட்டியாந்தொட்டை சாந்த மரியால் தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்ச்சி

சிறுவர் தினத்தை முன்னிட்டு யட்டியாந்தொட்டை பிரதேச சபை மற்றும் சிறுவர் முன்பள்ளிகள் இனைந்து நடாத்திய சிறுவர் தின நிகழ்ச்சி யட்டியாந்தொட்டை வின்சன்ட் பெரேரா மைதானத்தில் இன்று (01/10/2018) காலை நடைப்பெற்றது.
குறித்த நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்துகொண்டனர். இதன் போது யட்டியாந்தொட்டை சாந்த மரியால் தமிழ் வித்தியாலய மாணவ, மாணவிகள் போதைப்பொருளுக்கு எதிராகவும் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக நடைப்பயணம் ஒன்றையும் மேற்கொண்டனர்.