செய்திகள்

யானைகள் தொடர்பில் கூடுதல் அவதானம்.

நாடு முழுவதுமுள்ள யானைகள் தொடர்பான விபரங்களை திரட்டுவதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

அடுத்த மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் யானைகளை கணக்கிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் யானைகள் நடமாடும் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில், 2 ஆயிரத்து 229 பகுதிகளில் 7 ஆயிரத்து 316 கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்தி இந்த நடவடிக்கை இடம்பெறவுள்ளது.

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் 2011 ஆம் ஆண்டிலேயே இறுதியாக யானைகள் தொடர்பில் கணிப்பீடுகளை மேற்கொண்டிருந்தனர்.

அப்போதைய கணக்கெடுப்பின் பிரகாரம் நாட்டில் 5 ஆயிரத்து 879 யானைகள் காணப்பட்டுள்ளன.

இதேவேளை யானைகள் தொடர்பான விபரங்களை திரட்டும் பணிகளுக்கான வெளிநபர்களை இணைத்துக் கொள்வதற்கும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன்பிரகாரம் 011 2888585 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு, கண்காணிப்பாளராக இணைந்து கொள்ள முடியும் என வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button