செய்திகள்
யால தேசிய வனவிலங்கு பூங்கா திடீரென பூட்டு : காரணம் வெளியாகியது.!

யால தேசிய வனம், நாளை முதல் ஒக்டோபர் 31ஆம் திகதிவரை தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவுகின்ற கடுமையான வறட்சி நிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சூரிய பண்டார கூறினார்.
அதன்பிரகாரம் யால தேசிய வனத்தின் 01ம் இலக்க வலயமான பலடுவான நுழைவாயில் மூடப்பட உள்ளது.
மூடப்படும் காலப்பகுதியில் உட்கட்டுமான அபிவிருத்தி மற்றும் மிருகங்களை தடையின்றி பராமரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
வருடாந்தம் இந்த காலத்தில் குறித்த தேசிய வனம் தற்காலிகமாக மூடப்படுவது வழமை. குறித்த காலத்தில் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல முடியாது.