செய்திகள்

யாழில் அதிகரிக்கும் குழந்தை தொற்றாளர்கள் : 49 நாள் சிசு உட்பட 9 சிறுவர்களுக்கு கொரோனா

யாழில் 49 நாள் சிசு உட்பட 9 சிறுவர்கள் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்களில் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளிலேயே இந்த விடயம் வெளியானது.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் பிறந்து 49 நாட்களேயான சிசுவும், 12 வயது சிறுமியும் தொற்றாளர்களாக இனங் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 6 மாத பெண் குழந்தையும், 3 வயது பெண் குழந்தையும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சங்கானையில் 15 வயது சிறுவனும், காரைநகரில் 15 வயது சிறுவனும், 13 வயது சிறுமியும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 14 வயது சிறுமியும், சண்டிலிப்பாயில் 17 வயது சிறுவனுமாக நேற்றைய தினத்தில் மாத்திரம் 9 குழந்தைகள், சிறுவர்கள் என தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.

இதேவேளை, அண்மை நாட்களாக குழந்தைகள் சிறுவர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுவது அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button