சமூகம்செய்திகள்

யாழில் ஆடைகள் கலைத்து சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஆண் மாணவர்கள்.

யாழ்ப்பாணம் – வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் ஆண் மாணவர்கள் சிலரின் ஆடைகளை கலைந்து, அவர்களை பாடசாலை ஆசிரியர்கள் சோதனைக்கு உட்படுத்தியமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாணவர்களின் பெற்றோர்களால் இந்த முறைப்பாடானது கடந்த வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதற்கான காரணம் இதுவரையில் தெரிவிக்கப்படாத நிலையில், அது தொடர்பிலான விசாரணைகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண கிளை முன்னெடுத்து வருவதாகவும் அதன் பேச்சாளர் எமது செய்தி சேவைக்கு குறிப்பிட்டார்.

Related Articles

Back to top button