செய்திகள்

யாழில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது.

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 39 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதி என மதிப்பிடப்பட்டுள்ளது.

பண்டத்தரிப்பு பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் மறைத்து வைத்திருந்த நிலையில் இன்று அதிகாலை இந்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 27 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Back to top button
image download