செய்திகள்

யாழில் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு பகுதி விடுவிப்பு

யாழ்ப்பாணம் – நல்லூர் அரசடிப் பகுதியை தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கடந்த 28ஆம் திகதி முதல் முடக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.

நல்லூர் அரசடியில் கொவிட்-19 தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டதையடுத்து, அந்தப் பகுதி கடந்த மே 28ஆம் திகதி முடக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை முதல் அரசடிப் பகுதி விடுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சாவற்காடு கிராமம் முடக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button