செய்திகள்

யாழில் தனியார் பஸ் எரியூட்டப்பட்டது!

யாழ் சிறுப்பிட்டி பகுதியில் தனியார் பஸ்ஸொன்று எரியூட்டப்பட்டுள்ளது.

தனிப்பட்ட தகராறினால் பஸ்ஸில் பணிபுரியும் பஸ் நடத்துனர் பஸ்ஸூக்கு நேற்றிரவு தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பஸ் முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

பஸ்ஸூக்கு தீ வைத்த சிறுபிட்டியை சேர்ந்த 22 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Back to top button
image download