சமூகம்

யாழில் நடந்த சோகம்

பலாங்கொடை – பெலிஹுல் ஓயாவில் குளிக்கச்சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதுடன், நீரில் மூழ்கிய மாணவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் உயிரிழந்துள்ளனர்.

பெலிஹுல் ஓயாவில் பஹன்குடா குழி என்ற பகுதியில் மூழ்கி மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த மாணவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மூன்றாம் வருடத்தில் கல்வி பயின்ற மாணவர்கள் எனவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related Articles

3 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button