செய்திகள்

யாழில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் பலி..

.

யாழ்ப்பாணத்தில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு ஒன்பது மணியளவில் விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கொக்குவில் பகுதியை சேர்ந்த சுமார் 65 வயதான ஒருவரே புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சமிஞ்சை போடப்பட்டிருந்த நிலையில் சைக்கிளில் பயணித்தவர் புகையிரத மார்க்கத்தை கடக்க முயற்சித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Related Articles

Back to top button
image download