செய்திகள்

யாழில் மற்றுமொரு ஆசனம் பறிபோகிறது.!

2020ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலின் படி, யாழ். மாவட்டதிற்கு இருந்த ஆசனங்களில் ஒன்று குறைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இந்த ஆசனம் கம்பஹா மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கம்பஹா மாவட்டத்தில் 18ஆக இருந்த ஆசனங்களின் எண்ணிக்கை 19 ஆகவும், யாழ். மாவட்ட இட ஒதுக்கீடு 7 இல் இருந்து 6 ஆகவும் குறைந்துள்ளது.

மாவட்டங்களில் பதிவாகும் வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆண்டுதோறும் மாவட்ட இட ஒதுக்கீடு தொடர்பான மாற்றங்கள் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button