அரசியல்செய்திகள்

யாழில் முடிவை அறிவிக்கிறது கூட்டமைப்பு.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ்ஜின் நினைவு நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே அவர் எதிர்வரும் 10ம் திகதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

மேலும் சாவகச்சேரியில் நடைபெறும் நினைவு நிகழ்வில் இரா.சம்பந்தன் உரையாற்றவுள்ளார். இதன்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் மக்களுக்கு அறிவிப்பொன்றை அவர் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தல் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை பகிரங்க நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அறிவிக்க, ரவிராஜின் நினைவு நிகழ்வை பயன்படுத்தலாமென கூட்டமைப்பின் ஒரு தரப்பு திட்டமிட்டு, ஏற்பாடுகளை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்த நிகழ்விற்கு முன்னதாக யாழில் இடம்பெறவுள்ள சஜித் பிரேமதாசவின் பிரசாரக் கூட்டத்தில் இரா.சம்பந்தன் உரையாற்ற வேண்டுமென ஐ.தே.க விரும்புகிறது.

இது குறித்து இரா.சம்பந்தனிடமும் ஐ.தே.க பிரமுகர்கள் தொலைபேசியில் பேச்சு நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், சில வேளைகளில் இரண்டு மேடைகளிலும் அடுத்த வாரத்தில் இரா.சம்பந்தன் மேடையேறவும் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button