...
செய்திகள்

யாழில் மூன்று வாரங்களில் 21 பேருக்கு டெங்கு !

இந்த மாதத்தின் முதல் 3 வாரங்களில் மாத்திரம் சுமார் 21 பேர் டெங்குத் தொற்றால் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளதாக வைத்தியர் சி . யமுனாநந்தா தெரிவித்துள்ளார் . 

யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய், சண்டிலிப்பாய், வேலணை, தெல்லிப்பளை, பளை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு சிகிச்சை பெற்றுள்ளனர். 

எனவே, தற்போதைய மழையுடனான காலநிலையில் டெங்குத் தொற்றுப் பரவாது  இருப்பதற்கு சுற்றுச்சூழலைச் சுத்தமாக வைத்திருத்தல் மிகவும் அவசியம். 

நுளம்பு பெருகும் இடங்களை அழிப்பதாலும், வீதிகளில் கழிவுகளைப் பொறுப்பற்ற விதத்தில் வீசாது இருப்பதாலும் டெங்குத் தொற்றிலிருந்து எம்மையும், எமது சமூகத்தையும் பாதுகாக்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

Related Articles

Back to top button


Thubinail image
Screen