சமூகம்
யாழில் வாள்வெட்டு : ஒருவர் பலி! மற்றுமொருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் – வடமராட்சி, கிழக்கு குடத்தனை, மாளிகைத்திடல் பகுதியில் வாள்வெட்டு தாக்குதலில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதுடன், இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றுமொருவர் படுகாயம் அடைந்துள்ளதாக என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உறவினர்களுக்குள் ஏற்பட்ட பணக் கொடுக்கல் வாங்கல் தொடர்பான முரண்பாடே கொலைக்கு காரணம்
சம்பவத்தில் 66 வயதான ஒருவர் மரணமடைந்த நிலையில், 54 வயதான அவருடைய மனைவி காயமடைந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலை குறித்த தம்பதியினரின் மருமகன் மேற்கொண்டுள்ளதாகவும், அவர் தலைமறைவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.