...
செய்திகள்

யாழில் 2000ரூபா நிதி நிவாரணம் வழங்கிய மூவர் கைது.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி அதிகளவானோரை அழைத்து நிதியுதவி வழங்கிய குற்றச்சாட்டில் மூன்று பேர் யாழ்ப்பாணம் – நெல்லியடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று முற்பகல் வதிரி, இரும்பு மதவடி பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
எனினும், அந்த நிதியுதவியை பெறுவதற்காக நூற்றுக் கணக்கானோர் வரிசையில் காத்திருந்ததாக காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த இடத்திற்கு பிரவேசித்த காவல்துறையினர், நிதியுதவி வழங்கியவர் உள்ளிட்ட 3 பேரை கைது செய்துள்ளனர்

Related Articles

Back to top button


Thubinail image
Screen