...
செய்திகள்

யாழ்ப்பாணம்- அச்செழு அருள்மிகு சிவகாமி அம்மன் திருக்கோயில் 

தாயாகவிருந்துலகைக் காக்கின்ற அன்னை சிவகாமி 
தரணியிலே நல்லருளைப் பொழிந்திடவே வந்தாள்
நம்பியவளடியைச் சரணடையும் போது
நல்லருளை வழங்கியெமைக் காத்திடவே செய்வாள்
யாழ்ப்பாண திருநிலத்தில் நிலை பெற்ற அன்னை சிவகாமி 
வலிந்து வரும் தீமைகளைத் தடுத்திடவே வந்தாள்
நேர்மையுடன் என்றும் நாம் நடக்கின்ற போது 
நிச்சயமாய் நலங்களையே வழங்கியெமைக் காத்திடவே செய்வாள் 
அச்செழுவில் கோயில் கொண்டு அருளுகின்ற அன்னை சிவகாமி 
அஞ்சும் நிலையகற்றியெம்மை வாழவைக்க வந்தாள் 
என்றும் அவள் நாமம் உச்சரிக்கும் போது 
ஏற்ற வழிகாட்டியெம்மைக் காத்திடவே செய்வாள் 
அருள்தந்து ஆதரித்து அணைக்கும் அன்னை சிவகாமி 
வளம் தந்து வாழ்வளிக்க எண்ணியே வந்தாள்
ஒன்று பட்டு ஒற்றுமையாய் நாம் வாழும்போது
உயர்ச்சிதந்து எமக்கருள அத்தனையும் செய்வாள்
சிவனாரின் அருகினிலே வீற்றிருக்கும் அன்னை சிவகாமி 
சிந்தையிலே நல்லறிவே நல்கிடவே வந்தாள் 
குற்றமில்லா மனத்தினராய் நாம் உள்ளபோது
வெற்றிகளை அள்ளித்தர உதவிகளைச் செய்வாள்
தமிழ் முழங்கும் நம் மண்ணைக் காத்தருளும் அன்னை சிவகாமி 
தக்க வழி காட்டியெம்மை வாழவைக்க வந்தாள் 
தலைநிமிர்ந்து, துணிவுடனே நாம் வாழும்போது 
தவறாது உடனிருந்து எழுச்சி பெறச் செய்வாள்.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen