...
செய்திகள்

யாழ்ப்பாணம்- அராலி- ஆவாரம்பிட்டி அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் ..

அருவுருவாய் எழுந்தருளி அருள் பொழியும் தாயே
அரவணைத்து, ஆறுதலைத் தந்திடவே வருவாய் 
அல்லல் களைந்து நம்மை ஆதரித்துக் காத்திடவே
உலகாளும் உத்தமியே உடன் வருவாய் முத்துமாரியம்மா
யாழ்ப்பாண நன்னாட்டில் குடியமர்ந்த தாயே
மகிழ்ச்சி நிறை வாழ்வை எமக்களிக்க வருவாய் 
 உடல் நலமும், உள நலமும் ஒருங்கே சிறந்தோங்க
உற்ற துணையாயிருந்து உதவிடவே உடன் வருவாய் முத்துமாரியம்மா
சீர்பெற்ற நல்லூராம் அராலியில் கோயில் கொண்ட தாயே
சிறப்புற்று, உயர்வுடனே வாழ வழி தருவாய்
பெரு நோய்கள், மன நோய்கள் அண்டாதிருந்திடவே
பெருமனது கொண்டெமக்கு ஆறுதலைத் தருவாய் முத்துமாரியம்மா
வனப்பு மிகு நன்னிலத்தில் வரமளிக்கும் நாயகியே தாயே
வற்றாத கருணையை பொழிந்தருள வருவாய்
அண்டவரும் துன்பங்கள் அனைத்தும் அழிந்து அகற்றிடவே
தஞ்சமடையெங்களுக்கு துணையாக இருப்பாய் முத்துமாரியம்மா
ஆவாரம்பிட்டி நாவல் மரத்தடியில் நிலை 
கொண்ட தாயே
நிம்மதியும், நிலைத்த நற்பண்புகளும் நிலைக்க வழியமைப்பாய்
தானென்ற அகந்தையுடன் தறிகெட்டுத் திரிவோரை தடுத்து அடக்கிவிட
வீறுகொண்டு எழுந்தருள்வாய், முன்வந்து காப்பளிப்பாய் முத்துமாரியம்மா
அறம் காத்து மறமளிக்கும் தாயே முத்துமாரியம்மா
அற்புதங்கள் நிகழ்த்தி விட்டு அறநெறியைக் காத்திடுவாய்
கடந்தகால துயரநிலை இனித் தொடராதிருந்திடவே
தெளிவாக வழிகாட்டி காவல் செய்வாய் முத்துமாரியம்மா.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen