செய்திகள்

யாழ்ப்பாணம்- அரியாலை பிரப்பங்குளம் அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோயில்..

 
தாயாகவிருந்து துணையிருந்து காப்பவளே மகாமாரி
உன்னருளால் நாமெல்லாம் நலம் பெறவே வேண்டுமம்மா
கூடாத உறவுகளைக் குழிதோண்டிப் புதைத்து விட்டு
நல்லோரிணக்கத்துடன் நாம் வாழ அருள்வாயே
யாழ்ப்பாண நன்னகரில் வீற்றிருக்கும் மகாமாரி
வற்றாத கருணையினை எமக்களிக்க வேண்டுமம்மா
ஆணவத்தில் திளைத்திருப்போர் நிலையகற்றி விட்டுவிட்டு
அன்புநிறை நல்லவர்கள் உடன் வாழ அருள்வாயே
அரியாலை பிரப்பங்குளமருகில் கோயிலுறை மகாமாரி
அற்புதங்கள் பலவும் செய்து நலங்கள் தரவேண்டுமம்மா
துன்பம் தரும் தீச்செயல்கள் இல்லாது செய்து விட்டு 
தூய வள வாழ்வைத் தந்தெமக்கு அருள்வாயே
துன்பங்கள் களைந்தெமது துயர் போகும் மகாமாரி
துணையிருந்து எமைக் காக்க உடனிருக்க வேண்டுமம்மா
இதயமதில் இன்பமே என்றும் இருத்திவிட்டு
வாழ்வில் நலம் பெற்றுய்ய வழியெமக்கு அருள்வாயே
தமிழ் மணக்கும் சூழலிலே குடியிருக்கும் மகாமாரி
தலைகுனியா நிலையினையே உறுதிசெய்ய வேண்டுமம்மா
திட்டமிட்டு அழிவு செய்வோர் தீந்தழிந்து போய்விடவே
தவறாமல் காவல் செய்து உறுதிதந்து அருள்வாயே
மனக்கவலை போக்கிவிட்டு மகிழ்வு தரும் மகாமாரி
தடைகள் தகர்த்து நாம் முன்செல்ல வேண்டுமம்மா
தளராத மனங்கொண்டு உன்னடியார் வாழ்ந்திடவே
தாயே மகாமாரி உடனிருந்து அருள்வாயே.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen