செய்திகள்

யாழ்ப்பாணம்- அளவெட்டி அருள்மிகு கும்பளாவளைப் பிள்ளையார் திருக்கோயில் 

அளவெட்டி நல்லூரில் வீற்றிருக்கும் பிள்ளையாரே
அச்சம் அகற்றியெமக்கருள் தருவாய் பெருமானே
அல்லல் அகற்றியெமக்கருள் வழங்கும் பிள்ளையாரே
அன்பு நெறி நிலைத்து விட கருணை செய்வாய் பெருமானே
வளங் கொண்ட தமிழ் நிலத்தில் கோயில் கொண்ட பிள்ளையாரே
வற்றாத கருணையினை எமக்களிப்பாய் பெருமானே
குறை பொறுத்து நலன் காக்கும் பேரருளே பிள்ளையாரே
குறைவில்லா நிறை வாழ்வை எமக்களிப்பாய் பெருமானே
கும்பளாவளைப் பிள்ளையாரெனப் பெயர் கொண்ட பிள்ளையாரே
குலம் வாழ உறுதி செய்வாய் நாயகனே பெருமானே
உன்னருளால் உலகமெல்லாம் உய்ய வேண்டும் பிள்ளையாரே
உற்றவரும் ஊரவரும் உயர்ந்திடச் செய் பெருமானே
ஆற்றல் தந்து காப்பளித்து, அணைத்தருளும் பிள்ளையாரே
அருகிருந்து வழிநடத்தி உயர்ந்திவிடு பெருமானே
யாழ்ப்பாண வளநாட்டின் நலன் காக்கும் பிள்ளையாரே
நம்பி வரும் அடியவரின் குறைதீர்ப்பாய் பெருமானே
தேரேறிப் பவனிவரும் திருமகனே பிள்ளையாரே
தேசமெல்லாம் வளம் பெருக வழிவகுப்பாய் பெருமானே
தூயவள வாழ்வுக்குத் துணையிருக்கும் பிள்ளையாரே
துரத்திவரும் தீமைகளைத் துடைத்தெறிவாய் பெருமானே
நற்கருணைப் பேரருளே நலங்கள் தரும் பிள்ளையாரே
நாடி வரும் அடியவரைக் காத்தருள்வாய் பெருமானே
பாடிப் பணிந்துன்னை நாம் போற்றுகின்றோம் பிள்ளையாரே
பாரினிலே தலை நிமிர்ந்து வாழவைப்பாய் பெருமானே.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen